Popular Posts

Wednesday, January 9, 2013

நியு இயர் -ஹேங் ஓவர்

நியு இயர் -ஹேங் ஓவர்

க.அருள்மொழி.

புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் 'தண்ணி' இல்லாமல் இருக்குமா? பழைய ஆண்டு முடிந்துவிட்ட சோகத்தை மறக்கவும் புது ஆண்டு பிறப்பைக் கொண்டாடவும் வசதியாக டிசம்பர் 31ம்தேதி மாலையில் ஆரம்பிக்கும் ஆட்டம் மறுநாள் விடியும்போதுதான் முடியும்.
'மங்காத்தா' படத்தில் அஜித் அடிக்கடி சொல்வது போல் ஒவ்வொரு குடிகாரனும் "சே இந்த சனியன இனி தொடவேக் கூடாது" என்று 'ஹேங் ஓவர்' மண்டையை துளைக்கும்போது தனக்குத்தானே சொல்லிக் கொள்வதும் பின்னர் 'நார்மல்' ஆன பின் மீண்டும் பாட்டிலைத் தேடுவதும் வழக்கமாக நடப்பதுதான். இதைத்தான் நம்மூரில் "குடிகாரன் பேச்சு" என்கிறார்கள்.

நம் அருகில் இருக்கும் சில குடி அடிமைகளைப் பார்த்திருப்போம். ஹேங் ஓவர் என்றால் காலையில் ஒரு பெக் போட்டால் சரியாகி விடும் என்பார்கள். குடித்து விட்டு வாந்தி எடுத்தாலும் மீண்டும் ஒரு குவார்ட்டர் அடித்தால் நார்மலாகி விடும் என்பார்கள். இப்படி மீண்டும் மீண்டும் குடிப்பது சரியா?

ஹேங் ஓவர் எனப்படும் போதை நீட்சி ஒரு பெரிய விஷயமல்ல என்பது சரியா? உண்மை என்னவென்றால் அதிகமாகக் குடிப்பது மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது.மது மூளையிலுள்ள வேதிப் பொருட்களுடன் வினை புரிவதால் தலைவலி, மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்துவதோடு வயிற்றுப் போக்கையும் உண்டாக்குவதால் நீரிழப்பும் ஏற்படுகிறது. காலையில் வாட்டிஎடுக்கும் தலைவலியோடு சோர்வு, வயிற்றைப் புரட்டுவதோடு நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

ஹேங் ஓவர்- ஆணும் பெண்ணும் சமம்? இல்லவே இல்லை! ஒரே அளவு மதுவை ஆணும் பெண்ணும் உட்கொள்ளும்போது பெண்ணுக்கு அதிக விளைவுகள் உண்டாகிறது. ஏனென்றால் பெண்களின் உடலில் உள்ளதைவிட ஆணின் உடலில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் அது மதுவை நீர்க்கச் செய்கிறது.ஆனால பெண்களுக்கு போதையையும் பக்க விளைவையும் அதிகமாக்குகிறது.

அதிகமாகக் குடிப்பவர்கள்தான் ஹேங் ஓவர் ஆல் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சரியா? இப்படி சொல்வதும் பொய்தான். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு 'ஸ்மால்' குடித்தாலும் தலைவலியும் பிற ஹேங் ஓவர் தொல்லைகளும் வருவதுண்டு. தண்ணீர் அல்லது மதுவல்லாத வேறு பானங்களை இடையிடையே அருந்துவதால் நீரிழப்பைத் தடுப்பதோடு குடிக்கும் மதுவின் அளவையும் குறைக்கலாம்.அதனால் பக்க விளைவுகளையும் குறைக்கலாம்.

ஒயின் ஒரு மென்மையான பானம் என்பது சரியா? இக்கருத்து எல்லோருக்கும் பொதுவானதல்ல.அதில் கலக்கப்படும் பொருட்களால் சிலருக்கு தலைவலி மண்டையைப் பிளப்பதுண்டு.விஸ்கி போன்ற 'மால்ட்' பானங்களும் கடுமையான ஹேங் ஓவர் ஐ உண்டாக்கும். இதுபோன்ற காலை விளைவுகளுக்காக நீங்கள் கவலைப் படுவீர்களானால் உங்களுடைய தேர்வு பீர் அல்லது தெளிவான பானங்களான வோட்கா அல்லது ஜின் ஆக இருக்கட்டும்-அதுவும் கொஞ்சமாக.

டயட் காக்டெயில் பாதுகாப்பானது? நீங்கள் கலோரிகளைக் கணக்கிட்டு சாப்பிடுபவரென்றால் அது சரி.ஆனால் ஹேங் ஓவரிலிருந்து தப்பித்து விட முடியாது.பழங்கள்,பழச் சாறுகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் ஹேங் ஓவர்
எ ஃ பக்டைக் குறைக்கலாம்.

பிராந்திக்கு முன் பீர்? ஹேங் ஓவர் என்பது நீங்கள் குடிக்கும் மதுவின் அளவைப் பொறுத்ததே.மாறாக எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்ததல்ல. திட்டமான அளவு என்பது 12 அவுன்ஸ் (350 மிலி.)பீர். அல்லது 150 மிலி.ஒயின் அல்லது 45மிலி.வடி சாராயம்.அதற்கு மீறி தினமும் குடிப்பது சரியல்ல.

படுக்கும் முன் பாஸ்டா?குடித்துவிட்டு படுப்பதற்கு முன் பாஸ்டா எனப்படும் நூடுல்ஸ் வகை உணவை உண்டால் போதை நீட்சியைக் குறைக்கலாம் என்று சிலர் நினைப்பதுண்டு. இரண்டு வகையில் இது தவறானது. படுக்கும்போது உண்பது என்பதே தவறானது.எப்படியும் குடிக்கும் போதும் சாப்பிட்டிருப்பீர்கள்.இரண்டாவதாக உடல் ஆல்கஹாலை உறிஞ்சிக்கொண்டிருக்கும்போது உணவை மெதுவாகவே ஜீரணிக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதே சரி.

படுக்கும்போது வலி நிவாரணியை உட்கொள்வது நல்லது? வலி நிவாரணிகளின் வேலை நான்கு மணி நேரம் மட்டுமே இருக்கும்.அதனால் நீங்கள் எழும்போது எப்படியும் தலைவலி நிச்சயம். ஒன்று செய்யலாம். இடையில் நீங்கள் விழித்துக் கொண்டால் அப்போது அந்த மாத்திரையை போட்டுக் கொள்ளலாம். சாதாரண மாத்திரைகளை மட்டுமே போட்டுக் கொள்ளுங்கள். acetaminophen போன்றவை ஆல்கஹாலுடன் வினை புரிந்து ஈரலைப் பாதிக்கும்.

மது நன்கு தூங்க உதவுகிறது? உண்மை அதற்கு மாறானது.மது சீக்கிரம் உறங்க வைத்தாலும் 'நல்ல' தூக்கத்திற்கு உதவுவதில்லை. REM எனப்படும் வேகக் கண்ணசைவுத் தூக்கத்தில் மது இடையூறு செய்து விரைவிலேயே எழுப்பி விடுகிறது. அளவுக்கதிகமாக குடிப்பதால் பின்னிரவில் விழிப்பு ஏற்பட்டு மீண்டும் தூண்டுவதில் சிரமம் ஏற்படுகிறது.

கா ஃ பி நிவாரணம் அளிக்குமா? அதிகமாக கா ஃ பி குடிப்பது நீரிழப்பை ஏற்படுத்துவதோடு ஹேங் ஓவரை தீவிரப் படுத்துகிறது. மது அருந்திய மறுநாள் கா ஃ பி க்கு பதிலாக தண்ணீர் அல்லது எனர்ஜி டிரிங்க் ஏதாவது அருந்தலாம்.இதனால் உடலில் நீர்மச் சத்து அதிகரிக்கிறது.

மூலிகை மருத்துவம் உதவும். பால் பேரி ,கற்றாழை சாறு போன்றவை வயிற்றுக் குமட்டல், வாய் உலர்தல் போன்றவற்றை குறைக்கும். ஆனால் தலை வலியைப் போக்காது. தீர்வு? தானாகச் சரியாகும் வரைக் காத்திருக்க வேண்டியதுதான்.

மது உயிரைக் கொல்லும். இதுவே உண்மை. அளவுக்கதிகமாக மது அருந்துதல் கள்ளச் சாராயம் அருந்துதல் என்பது உயிருக்கு உலை வைக்கக் கூடியது. அளவுக்கதிகமாக அல்லது விஷச் சாராயம் அருந்தியதற்கான அறிகுறிகள் :
# மனக்குழப்பம் உன்மத்த நிலை (அதீத மயக்கம்.)
# வாந்தி.
# அசைவற்றுக் கிடத்தல்.
# மெதுவான, சீரற்ற சுவாசம்.
# உடல் சூடு குறைதல் உடல் நீல நிறமாதல்.
இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே 108 ல் போட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லுங்கள்.

ஒரே நாளில் எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டுமென்ற வேகம் கொண்டு போய் விடும் இடம் சோகம். தானத்தில் சிறந்தது 'நிதானம்' என்பதை உணர்ந்து அளவோடு ஆட்டம் போடுங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.
 
புகைப்படம்: நியு இயர் -ஹேங் ஓவர் 

No comments:

Post a Comment